நாட்றம்பள்ளி அருகே அரசு பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா ஆத்தூர்குப்பம் ஊராட்சி பட்டுவெள்ளையூர் போயர் வட்டம் பகுதியில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் நத்தம் பட்டா சர்வே எண் 129/2 சுமார் 15 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுசிகர் என்பவர் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. பொதுமக்கள் இருக்கும் குடியிருப்பு அருகாமையில் சுசிகர் நிலம் உள்ளதால் சுற்று சுவர் அமைத்துள்ளார்.
இதனால் அப்பகுதியில் மழைநீர் வெளியேறாமல் குடியிருப்புக்குள் தேங்குவதால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். வருவாய் துறையில் மனு அளித்தும் எந்த நடவடிக்கும் எடுக்கப்படாததால் இன்று மாலை சுமார் 7 மணியளவில் அவ்வழியாக சொல்லும் தடம் எண் 27 பேருந்து வழிமறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 25க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் பொதுமக்களிடையே சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவாய் துறை முலம் இடத்தை அளவீடு செய்து தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்கள்.
No comments