Breaking News

பாட்டிலில் குடிநீரை பருகிவிட்டு போதை ஏறியது போல ஆட்டம் ஆடியதோடு, சினிமா பாடல் பாடி மதுக்கடையை மூட வலியுறுத்திய மூதாட்டி.


ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றை ஒட்டி, தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் எனக் கூறி பாமகவினர் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ராணிப்பேட்டையில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில், பாலாற்றை ஒட்டி தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் தோல் தொழிற்சாலைகளுக்கு பணிகளுக்கு செல்வோரும், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கும் மதுக்கடை இடையூறாக உள்ளதால் இதனை அகற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என கூறி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்  மதுக்கடைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது மூதாட்டி ஒருவர், தான் வைத்திருந்த பாட்டிலில் குடிநீரை பருகிவிட்டு  போதை ஏறியது போல ஆட்டம் ஆடியதோடு, சினிமா பாடல் பாடி மதுக்கடையை மூட வலியுறுத்திய  மூதாட்டி ஆடினார். இதில் மாவட்டத் தலைவர்  சுப்பிரமணி  நகர செயலாளர் செல்வம் மாநில பொதுக்குழு உறுப்பினர் கிரி குமரன்  வன்னியர் சங்க மாவட்ட தலைவர் லட்சுமணன்  உட்பட  ஏராளமான நிர்வாகிகள். பங்கேற்றனர் 

No comments

Copying is disabled on this page!