சின்னமனூர் நகரில் தெரு நாய்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இதனால் மக்களுக்கு ஏற்படும் சிரமம் குறித்து, சின்னமனூர் நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுத்த பாடில்லை.
தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் தெரு நாய்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இதனால் மக்களுக்கு ஏற்படும் சிரமம் குறித்து, சின்னமனூர் நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுத்த பாடில்லை அதுசமயம், கிராம, பேரூர், நகர உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்களில் மக்களை பீதி அடையச் செய்யும் தெரு நாய்களை கட்டுப்படுத்திட வேண்டி கால்நடைத் துறையில் அங்கம் வகித்து வரும் பிராணிகள் வதைத் தடுப்பு சட்டத்தின் கீழ் நமது மத்திய மற்றும் மாநில அரசுகள் ஓர் ஆண்டிற்கு நிறைய நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாக புள்ளி நிலவரங்களின் அடிப்படையில் தகவல் வெளி வருகின்றன.
நம்மில் பலர் கண்டு(ம்)கொள்ளாத பிராணிகள் வதை தடுப்புச் சட்ட கால்நடை துறைக்கு வரும் மத்திய/மாநில அரசின் நிதிகளை முறையாக மக்கள் நலம் சார்ந்த திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனரா? என்பது தற்போது உள்ளாட்சிகளில் உலாவி வரும் கருத்தடை செய்திடாத தெருநாய் பிராணிகளின் நாளுக்கு நாள் விஸ்வரூப படையெடுப்புகளை உற்று நோக்கும்போது அரசு கொடுக்கும் நிதிகளில் முறைகேடு நடப்பதாக வலுவான சந்தேகத்தை கிளப்பி வருகின்றதாகவும், அதனைத் தொடர்ந்து, சின்னமனூர் நகராட்சி நிர்வாகம் நகரினில் வளம் வந்து கொண்டிருக்கும் தெரு நாய்ப் பிராணிகளள கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கையினை காலத் தாமதமின்றி எடுக்கவேண்டும் என்று நகர் வாழ் அனைத்து தரப்பு பொதுமக்கள் சார்பாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
No comments