சென்னை கொளத்தூரில் இருந்து கடத்தப்பட்ட லாரி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பிடிபட்டது.
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த பழனி குமார் டிரேடர்ஸ் என்ற இரும்பு மற்றும் சிமெண்ட் விற்கும் கடையில் வேலை பார்த்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த சத்திய பிரகாஷ் என்ற இளைஞர்.நேற்று ஆயுத பூஜையின் போது பூஜை செய்த பின் தனது நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
மது போதையில் தனது நண்பர்கள் லாரி ஓட்ட கற்றுக் கொடுக்குமாறு கூறியதை அடுத்து லாரியை எடுத்து வந்த சத்திய பிரகாஷ் லாரி கடத்திக்கொண்டு உளுந்தூர்பேட்டை சாலையில் வண்டி ஓட்டி வந்த பொழுது சுங்கச்சாவடியில் பாஸ்ட் ட்ராக் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் விக்கிரவாண்டி கடந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போக்குவரத்து ரோந்து போலீசார் லாரி மடக்கி நிறுத்தப்பட்டது.
லாரியின் உரிமையாளர் புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து காவல்துறையினர் பாஸ்ட் ட்ராக் மூலம் கண்காணித்து லாரியை மடக்கிப் பிடித்தனர்.
No comments