மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் இணைப்பு கொக்கி உடைந்து இன்ஜின் தனியே பெட்டிகள் தனியே கழன்றதால் ரயில் சேவை பாதிப்பு.
இதனைத் தொடர்ந்து தற்போது ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்தில் வந்து கழன்று நின்றுள்ள சரக்கு ரயிலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தனியாகப் பிரிந்து சென்ற ரயிலின் இன்ஜினை மீண்டும் கொண்டு வந்து சரக்கு ரயில் உடன் இணைத்து ரயிலை மீண்டும் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இரண்டு பெட்டிகளிலும் உடைந்துள்ள இணைப்பு கொக்கிகளை அகற்றி புதிய கொக்கைகளைப் பொருத்திகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தனியாக கழன்று நின்ற பெட்டிகளை மற்றொரு இன்ஜினை வரவழைத்து தற்பொழுது மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு அதனை கொண்டு வந்த சேர்க்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி பொன்னேரி என புறநகர் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆங்காங்கே நின்று கொண்டிருக்கின்றன.
தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் இன்ஜினுடன் சரக்கு ரயிலை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து வரும் புறநகர் ரயில்களை மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி அங்கிருந்து சென்னை மார்க்கத்திற்கு திருப்பி தற்பொழுது இயக்கி வருகின்றனர்.
No comments