திருச்செந்தூர் அருகே போட்டி போட்டு வந்த கார்கள் பைக் மீது மோதி விபத்து: வாலிபர் பரிதாப சாவு.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள தெற்கு பரமன்குறிச்சி கஸ்பாவைச் சேர்ந்த ரய்சன் பிரபு மகன் ஜெகு பேட்டர்சன் (23). இவரது நண்பர் உடன்குடியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் வினோத் சிவா (28). இவர்கள் தங்களது கார்களில் பெரியதாழையைச் சேர்ந்த ரினோ மகன் பெசிகான் (24), ரமேஷ் மகன் ரசிகன் (24), திருச்செந்தூரை சேர்ந்த பாலசங்கர் மகன் பாலசதீஷ் (23), உடன்குடியை சேர்ந்த சாமிதுரை மகன் இசக்கிமுத்து (23) மற்றும் வெள்ளாளன் விளையைச் சேர்ந்த அகஸ்டின் மகன் சாம்சன் (23) ஆகியோரை அழைத்துக்கொண்டு காயல்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தனர்.
இரு கார்களும் போட்டி போட்டுக் கொண்டு வந்தபோது, காயல்பட்டினம் மகளிர் க ல்லூரி அருகே ஜொகு ஓட்டி வந்த கார், எதிரே பைக்கில் வந்த ஓடக்கரையைச் சேர்ந்த கணேசன் மகன் சுரேஷ் (40) மீது மோதியது. இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்த ஓடக்கரையைச் சேர்ந்த இளைஞர்கள், இரு கார்களையும் அடித்து சேதப்படுத்தினர்.
திருச்செந்தூர் தாலுகா போலீசார், சுரேஷ் உடலை மீட்டு கூறாய்வுக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார்களை போட்டி போட்டு ஓட்டி வந்த பரமன்குறிச்சி சரஸ்வதி மனோகர் காலனியை சேர்ந்த ஜெகு பேட்டர்சன், உடன்குடி கிழக்கு பஜாரை சேர்ந்த வினோத் சிவா ஆகியோரை கைது செய்தனர்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல்: 7339011001.
No comments