"வழக்கே பொய் வழக்கு ராமையன்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் என்பதால் வழக்கா?
நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள ராமையன்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் மாரியப்ப பாண்டியன் மக்கள் பிரச்சினைகளை தேடி சென்று தீர்க்க ஓடோடி போய் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.ஆனால் அவரையே பிரச்சனையாக கருதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வதாக குற்றம் சாட்டி இன்று(15-10-2024) நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.
மக்களுக்காக போராடும் தன் மீதே காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்து வருவதாக கூறி முட்டி போட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து கவனத்தை ஈர்த்தார்.இந்த காலத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழும் பெரும்பாலான மக்கள் மத்தியில் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடும் விரல் விட்டு எண்ணக் கூடிய சில மனிதர்களில் ஒருவரான மாரியப்ப பாண்டியன் மீதே காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்தால் யார் தான் பொது வெளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பார்கள்.காவல்துறை அறம் சார்ந்த கைது நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று முட்டி போட்டார்.
No comments