அவல்பூந்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கணக்கில் வராத 02.56 லட்சம் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சார் பதிவாளர் அலுவலகத்தில் முத்துக்குமார் என்பவர் சார் பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த அலுவலகத்தில், அவல்பூந்துறை, வெள்ளோடு, எழுமாத்தூர், மொடக்குறிச்சி, கணபதிபாளையம், கஸ்பாபேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சேர்ந்த பொதுமக்கள், பத்திரப்பதிவு, வில்லங்க சான்றிதழ் பெறுதல், திருமணப் பதிவு உள்ளிட்ட பதிவு சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மாலை, சார் பதிவாளர் அலுவலகத்திற்குள், அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார், சுமார் மூன்று மணிநேரம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், கணக்கில் வாராத 2 லட்சத்து 56 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ள போலீசார், இதுகுறித்து விளக்கமளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
No comments