Breaking News

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை சண்முகையா எம்எல்ஏ துவங்கி வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை எம்.சி. சண்முகையா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மருதன்வாழ்வு கிராமம், நடுத்தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, நாரைக்கிணறு கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணி, என்.புதூரில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி, காலனி தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, கீழக்கோட்டை ஊராட்சி கே.கைலாசபுரம் கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எட்வின், பணி மேற்பார்வையாளர் சங்கர், ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் அருண்குமார், சதீஷ், திமுக ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பார்வதி, மகளிரணி ஆவுடைத்தாய், மகளிரணி துணை அமைப்பாளர் பிரியா, மாணவரணி துணை அமைப்பாளர் ராகுல், கிளை செயலாளர்கள் ராஜன், சண்முகசிகாமணி, பாலசந்திரன், மனோகரன், சதீஷ், வினோத், பாலவிநாயகம், ராஜ், முருகன், பழனி, கோமதி மற்றும் ஊராட்சி செயலர் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!