Breaking News

புதுவையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என மாநில சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது.

 



இதுகுறித்து, புதுவை அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,


உச்சநீதிமன்ற உத்தரவின்படி, புதுவையில் தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும்.அதன்படி, தீபாவளியன்று (அக்.31) காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்படும்.

மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் நீதிமன்ற வளாகத்தின் சுற்று வட்டாரங்களின் 100 மீட்டருக்குள் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு மற்றும் நச்சுப் புகை சுற்றுச்சூழலுக்கும், நமது ஆரோக்கியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பட்டாசுகள் வெடிப்பதால் முதியோா், கா்ப்பிணி பெண்கள், இதய நோயாளிகள், ஆஸ்துமா நோயாளிகள், குழந்தைகள் ஆகியோருக்கு அதிக பாதிப்பை விளைவிக்கும்.எனவே, பிறருக்கு இடையூறாக இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Copying is disabled on this page!