கிராம பணியாளர்களை கிராமப் பணி தவிர பிற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில நிர்வாகம் உத்தரவிட வேண்டும்:- மயிலாடுதுறையில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம பணியாளர் சங்கத்தின் மாநில அமைப்பு நிலை கூட்டத்தில் தீர்மானம்:-
மயிலாடுதுறையில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம பணியாளர் சங்கத்தின் மாநில அமைப்பு நிலை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், கிராமப்புற பணியாளர்களின் கோரிக்கைகளுக்காக மாநில அளவில் தமிழ்மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தலைமையில் கூட்டப்படும் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பில் இணைந்து செயலாற்றுவது என முடிவெடுக்கப்பட்டது. மேலும், கிராம பணியாளர்களுக்கு கிராமப் பணி தவிர பிற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என மாநில நிர்வாகம் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், வருவாய்துறை சம்பந்தமான அனைத்து அடிப்படை விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கும் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு மட்டுமின்றி, இளநிலை உதவியாளர், பதிவு எழுத்தாளர், ஈப்பு ஓட்டுநர் போன்ற பணியிடங்களையும் வழங்க வேண்டும், கிராம உதவியாளர்களின் பதவி உயர்வு காலத்தை 5 ஆண்டுகளாக மாற்றிட வேண்டும், கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் முடிவில், சங்கத்தின் மாநில தலைவராக மணிகண்டன், மாநில பொதுச்செயலாளராக நல்லமுகமது, மாநில பொருளாளராக ரூபலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
No comments