மேசை டிராயரில் பதுங்கியிருந்த பாம்பு பாம்பு பிடி வீரர் பாம்பை பிடித்து பத்திரமாக வனப்பகுதியில் கொண்டு விட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் கீழ முக்கூட்டு பகுதி சேர்ந்த விஜயகுமார் என்பவர் வீட்டில் இருந்த மேஜை டிராயரில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது அதனை அறிந்த விஜயகுமார் உடனடியாக சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடி வீரர் சினேக் பாண்டியன் என்பவருக்கு தகவல் அளித்துள்ளார் தகவலின் பெயரில் விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் சினேக் பாண்டியன் விஜயகுமார் வீட்டில் மேஜை டிராயரில் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்தார் அந்த பாம்பு சாரை பாம்பு என தெரிந்தது பின்னர் அதனை சினேக் பாண்டியன் பத்திரமாக வனப்பகுதியில் கொண்டு விட்டார் பின்னர் விஜயகுமார் வீட்டினர் நிம்மதி அடைந்தனர்.
No comments