திருவிளையாட்டத்தில் மூன்று அம்ச கோரிக்கை வலியுறுத்தி அங்காடி பணியாளர்கள் மூன்றாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம், பொதுமக்கள் சிரமம்...
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் திருவிளையாட்டம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நகர கூட்டுறவு கடன் சங்கம் விற்பனையாளர்களிடம் அபராத தொகை என இரு மடங்கு வசூலிப்பதை பணியாளர்களின் நலன் கருதி உத்தரவு ரத்து செய்திட வேண்டும் கூட்டுறவு நியாய விலை கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை அதிகமாக இறக்கி விற்பனை செய்ய குறியீடு நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும் தமிழக முழுவதும் நியாய விலை கடை விற்பனையாளர்களை சொந்த மாவட்டத்திலும் குறைந்தது 10 கிலோமீட்டர் தூரத்திற்கு அவர்களுடைய குடும்பம் உள்ள ஒன்றியத்திலேயே மாற்றி தர அரசு ஆணையிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் மூன்றாவது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டம் சங்கத்தின் ஒன்றிய தலைவர் கார்த்தி தலைமையில் நடைபெற்றது சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் நடைபெற்றது ஒன்றிய பொருளாளர் நாகராஜ் மாவட்ட இணை செயலாளர் மணிகண்டன் நன்றி உரை ஆற்றினர் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் 14 கூட்டுறவு கடன் சங்கம் 74 முழு நேர மற்றும் பகுதிநேர அங்காடிகள் இன்று மூன்றாவது நாளாக மூடப்பட்டு போராட்டம் நடைபெற்றது மூன்றாவது நாளாக அங்காடிகள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி அங்காடிகள் மூடப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments