திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் கடல் நீர் உள்வாங்கியதால் பாறைகள் வெளியே தெரிந்தன.
மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாள்களிலும் அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாள்களிலும் கடல் நீர்மட்டத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும். இந்நிலையில் திருச்செந்தூர் கோயில் பகுதியில் நேற்று மாலை அய்யா கோயில் அருகே கடல் நீரானது சுமார் 80 அடி தொலைவு உள்வாங்கியதால் பாறைகள் வெளியே தெரிந்தன.
பின்னர் கடல் இயல்பு நிலைக்கு மாறியது. ஆனாலும் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடினர். திருச்செந்தூர் பகுதியில் நேற்றுமாலை 4 மணியளவில் சுமார் அரைமணி நேரம் கனமழை பெய்ததால் சாலையெங்கும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
-திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments