ஊழியர்களுக்கு பரிவட்டம் கட்டி தங்க நாணயம் புத்தாடை பட்டாசு இனிப்புகள் வழங்கி அறுசுவை உணவு வழங்கி உபசரித்த உரிமையாளர் மகிழ்ச்சி அடைந்த ஊழியர்கள்.!!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காத்தான் சாவடி, பொறையார், தரங்கம்பாடி பகுதியில் லக்கிஷா குரூப்ஸ் என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது இந்நிலையில் இந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் தீபாவளி கொண்டாடும் வகையில் அவர்களது குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது கடந்த 2018 முதல் ஆண்டுதோறும் தீபாவளி ஒட்டி அந்த நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் குடும்பத்திற்கும் புத்தாடைகள் வழங்குவதோடு பணியாளர்கள் ஊழியர்களுக்கு கௌரவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது இந்த ஆண்டு தீபாவளி ஒட்டி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊழியர்கள் பணியாளர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர் ஊழியர்கள் பணியாளர்களுக்கு கௌரவிக்கும் வகையில் பரிவட்டம் கட்டி புத்தாடை பட்டாசு இனிப்புகளோடு தங்க நாணயம் ரொக்க பணமும் வழங்கப்பட்டது அதனை பெற்றுக் கொண்ட பணியாளர்கள் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் பூரிப்பு அடைந்து பெருமகிழ்ச்சி அடைந்தனர் மேலும் அனைவருக்கும் அறுசுவை அசைவ உணவு வழங்கப்பட்டது நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ஏ. கே. சந்துரு ஊழியர்கள் பணியாளர்களுக்கு புத்தாடை பட்டாசு இனிப்பு தங்க நாணயம் ரொக்கப்பணம் வழங்கி பரிவட்டம் கட்டி கௌரவித்தார் சால்வை மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் மேலும் நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ஏ. கே. சந்துரு அனைத்து ஊழியர்கள் பணியாளர்களுக்கும் அறுசுவை உணவு பரிமாறினார் இந்நிகழ்வில் ஊழியர்கள் பணியாளர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர் ஆண்டுதோறும் தீபாவளி ஒட்டி நிறுவனத்தில் பணியாளர்கள் ஊழியர்களை கௌரவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டும் அதேபோன்று நடைபெற்றது அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது இதில் நிறுவனத்தின் நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
No comments