திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு புதிதாக விடப்பட்டுள்ள, ரயிலுக்கு சீர்காழியில் பொதுமக்கள்,ரயில் சங்கம் சார்பில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு....
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு அரசு பேருந்து இயக்க பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சியில் இருந்து விடியற்காலை காலை 5:30 மணி அளவில் புறப்படும் ரயில், தாம்பரத்தை மதியம் 12. 30 அளவில் சென்றடைகிறது,இதே போல தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 புறப்படும் ரயில் திருச்சியை இரவு 11.30 மணிக்கு சென்றடைகிறது, திருச்சி மார்க்கத்திலிருந்து தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை, சீர்காழி வழியாக விழுப்புரம் செங்கல்பட்டு தாம்பரம் செல்லக்கூடிய ரயில் மிக குறைவாக இருந்து வந்ததால் இந்த டெல்டா பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர், இந்த நிலையில் தற்போது ரயில்வே துறை சார்பில் திருச்சியில் இருந்து தாம்பரம் செல்லக்கூடிய விரைவு ரயிலை விட்டுள்ளனர் இதனால் இந்த பகுதி பொதுமக்கள், வணிகர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு இன்று முதல்முறையாக வந்த தாம்பரம் விரிவுரைகளுக்கு ரயில்வே சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர், ரயிலில் இருந்த பயணிகளுக்கு இனிப்புகளும் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர் மேலும் சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்திற்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பயணிகள் வைத்துள்ளனர்.
No comments