பொறையார் கடைவீதியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பொறையார் பகுதியில் உள்ள கடைகளில் இன்று மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் அலுவலர்களால் ஆய்வு நடைபெற்றது இதில் கடைகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர் மேலும் கடைகளில் இரசாயன வண்ணம் பூசப்பட்ட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்தனர் மேலும் உணவு பாதுகாப்பு குறித்தும் தடை செய்யப்பட்ட பாலித்தீன் மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர் மேலும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவுறுத்தலின்படி தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கடைகளில் ஆய்வுகள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments