Breaking News

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி கடந்து செல்லும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் இடத்தையே நோக்கி செல்லும் வாகனங்கள்..

 


தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் விக்கிரவாண்டி வி.சாலைப் பகுதியை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.....அந்த வகையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருச்சி,மதுரை,திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நள்ளிரவு முதல் தற்போது வரை கார் வேன் பஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி கடந்து வி.சாலை நோக்கி பயணம் மேற்கொண்டு வருகின்றனர் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் கொடியுடன் வரும் பட்சத்தில் அவர்களுக்கு தனி பாதை சுங்கச்சாவடி பகுதியில் ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர் தொடர்ந்து சுங்கச்சாவடி பணியாளர்கள் தமிழக வெற்றி கழகத்தின் கொடியுடன் வரும் கார் மற்றும் வாகனங்களை அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பாதையில் செல்லுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் இதனால் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் அனைத்து வாகனங்களும் சுங்கச்சாவடி கடந்து சென்று வருகிறது நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை செங்குறிச்சி சுங்கச்சாவடியை கடந்து சுமார் 600க்கும் மேற்பட்ட வாகனங்கள் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு சென்றுள்ளதாக சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Copying is disabled on this page!