பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் போராட்டம் அறிவித்துள்ளனர்
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர்கள் கூட்டுக்குழு சார்பில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டம் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில்(PRTC) கடந்த 2015 ஆம் ஆண்டு 276 பேர் ஒப்பந்த முறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களாக பணி அமர்த்தப்பட்டனர்.
கடந்த 7 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில்,தற்போது தொடர் போராட்டத்தில் ஈடுபடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அதன்படி,வரும் 9-ம் தேதி கவன ஈர்ப்பு வாயிற் கூட்டம்,16-ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மற்றும் 23-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
No comments