அனுமதியின்றி சவுடுமணல் ஏற்றி சென்ற லாரி பறிமுதல் ஓட்டுநர் கைது லாரி உரிமையாளரை தேடி வரும் போலீசார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் காவல் சரக்கத்திற்குட்பட்ட நண்டலறு காவல் சோதனை சாவடி என்பது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை இணைக்கும் பகுதி இரு மாநில எல்லை பகுதியாக உள்ளதால் நாள்தோறும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இருப்பினும் இந்த காவல் சோதனை சாவடி வழியாக நாள்தோறும் மது கடத்தல் மற்றும் மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் இந்நிலையில் நேற்று அனுமதி இன்றி போலி ரசீது தயார் செய்து மேல பெரும்பள்ளம் கிராமத்திலிருந்து நாகப்பட்டினம் சவுடுமணல் எடுத்துச் சென்ற லாரி பிடிபட்டது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் பொறையார் காவல் ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் உதவி ஆய்வாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அனுமதியின்றி சவுடு மணல் எடுத்துச் சென்ற லாரியை பிடித்தனர் பின்னர் லாரி ஓட்டுநர் நாகப்பட்டிணத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரை கைது செய்தனர் லாரி உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர் மேலும் தொடர்ந்து இந்த பகுதி வழியாக அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்வதை முற்றிலுமாக தடுப்பதற்கு மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments