உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாமில் ஆய்வு நடத்திய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தலைக்கவசம் அணியாமல் சென்ற பெற்றோர்களுக்கு அறிவுரை:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் 24 மணி நேரம் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது செம்பனார்கோவிலில் உள்ள பள்ளி ஒன்றுக்கு மாணவர்களை அவர்களது பெற்றோர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்ததைக் கண்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தனது வாகனத்தை விட்டு இறங்கி
சாலையில் தலைக்கவசம் அணியாமல் பள்ளிக்கு குழந்தைகளை வாகனங்களில் அழைத்து சென்ற பெற்றோர்களை மாவட்ட ஆட்சியர் நிறுத்தி நேரில் அழைத்து தலைக்கவசத்தின் அவசியத்தை எடுத்து கூறி சாலையில் விபத்தில்லா பயணம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
No comments