உளுந்தூர்பேட்டை நகராட்சி கிழக்கு கந்தசாமிபுரம் 17 வது வார்டு பகுதியில் புதிய மின்மாற்றி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி கிழக்கு கந்தசாமிபுரம் 17 வது வார்டு பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதனை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு அவர்கள், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிவராமன் அய்யம்பெருமாள், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 17-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் செல்வகுமாரி ரமேஷ்பாபு வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் அருண்குமார், அம்சவல்லி, நகர மன்ற உறுப்பினர்கள் குமரவேல், பூம்பொழில் தினேஷ்பாபு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், சேர்ந்த நாடு ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், போர் மேன் சுரேஷ், மணிவாசகம், கலைமணி, குமரவேல், வார்டு நிர்வாகிகள் பன்னீர்செல்வம், அருணா சூர்யகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments