வில்லியனுார் அருகே கடனுக்கு பீர் கொடுக்காததால் ஆத்திரமடைந்த வாலிபர், பார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த பங்கூர் பகுதியில் தனியார் ரெஸ்டோ பார் உள்ளது.இதில் ஐயங்குட்டிப்பாளையத்தை சேர்ந்த பொழிலன் காப்பாளராக வேலை செய்து வருகிறார்.
நேற்று காலை முதல் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மது குடிக்க வந்துள்ளார். மாலையில் தான் வைத்திருந்த பணம் தீர்ந்து விட்டதால், கேஷியரிடம் கடனாக ஒரு பீர் பாட்டில் கேட்டுள்ளார். பீர் கொடுக்காததால் ஆத்திரமடைந்த வாலிபர் வெளியே சென்று, மீண்டும் மாலை பாருக்கு வந்து, பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடினார்.இதில் கேஷியருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பங்கூர் பேட் பகுதியை சேர்ந்த குருசாமி மகன் அருண்ராஜ்,(25) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
No comments