ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்திற்கு கடை அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கடை உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார் எம்எல்ஏ ஜிகே மணி.
ஒகேனக்கல் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் வீணாகும் தண்ணீரை ஏரி குளங்களுக்கு மாற்றக்கோரி பாமக சார்பில் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி கடந்த நான்காம் தேதி அன்று அரைநாள் கடை அடைப்பு போராட்டத்திற்கு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் பாப்பாரப்பட்டி, ஏரியூர், சின்னம்பள்ளி பெரும்பாலை கடைமடை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஒருசில இடங்களில் திமுக கட்சியினர் மட்டும் கடைகளை திறந்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில் பாமகவுக்கு ஆதரவு தெரிவித்த கடை உரிமையாளர்களுக்கு பென்னாகரம் எம்எல்ஏ. ஜிகே. மணி நோட்டீஸ் வினியோகம் செய்து கடை அடைக்கப்பட்ட உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், ஏரியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராசா உலகநாதன், ஏரியூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், மாவட்டத் துணைச் செயலாளர் மந்திரி கவுன்சிலர் மணி சின்னம்பள்ளி பகுதி ராஜ்குமார் செல்வம் உரக்கடை குமார் வெள்ளையன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments