உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 246 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 246 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வராணி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மற்றும் நகர மன்ற உறுப்பினர் செல்வம் டேனியல்ராஜ், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மாலதி ராமலிங்கம், செல்வகுமாரி ரமேஷ்பாபு, மனோபாலன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் பத்மநாபன், தங்க விஸ்வநாதன், மற்றும் மணிகண்டன், சிவப்பிரகாஷ் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments