மீண்டும் அதே இடத்தில் ஆட்டு சந்தை கொண்டு வர தமிழக அரசுக்கு கோரிக்கை.
தமிழக முதலமைச்சருக்கு சுமார் ஆறு வருடங்களுக்கு மேலாக முதல்வர் கவனத்திற்கு பலமுறை கடிதம் அனுப்பி எந்த நடவடிக்கைகளும் இல்லை, கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களுக்கும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களுக்கும் கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி அவர்களுக்கும் இந்த கோரிக்கைகளை தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன இதை கவனத்தில் கொண்டு வருகின்ற சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளை முன்னிட்டு நல்ல முடிவு வரும் என்று கோவில்பட்டி சுபாஷ் சந்திர போஸ் நற்பணி மன்ற இயக்கத்தின் சார்பாக இயக்கத்தினுடைய தலைவர் பாலமுருகன் தெரிவித்தார்.
இதனை முன்னிட்டு கோவில்பட்டி தபால் நிலையத்திற்கு முன்பு சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்கள் தபால் மூலம் கோரிக்கைகளை எழுதி தபால் அனுப்பி வைத்தனர்
No comments