கோவில்பட்டி தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அட்டை பெறுவதற்கான 3நாள்சிறப்பு முகாம் - கோவில்பட்டியில் தொடக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் இன்று முதல் தொடங்கி வரும் புதன்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக கோவில்பட்டி தாலுகா அலுவலக வளாகத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமினை கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் குடும்ப அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறப்பு முகாம் நடைபெறுவதே முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுவதற்கு பதிவு செய்து வருகின்றனர்.
No comments