நெடுஞ்சாலைத்துறை சோமநாயக்கன்பட்டி இரயில்வே பாலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தாமலேரிமுத்தூர் சாலையில் சோமநாயக்கன்பட்டியில் இரயில்வே கடவு எண். 92 க்கு பதிலாக மேம்பாலம் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார்கள்.
ஜோலார்பேட்டை முதல் பெங்களூர் செல்லும் இரயில்வே தடத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான இரயில்கள் செல்கின்றன. இப்பகுதியில் குடியானகுப்பம், சோமநாயக்கன்பட்டி பச்சூர் ஆகிய இடங்களில் இரயில்வே துறையின் மூலம் இரயில்கள் குறிக்கிடும் போது கேட் மூடப்பட்டு போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்படும்.
மேலும் இரயில்வேபாலம் முடியும் போது அதற்கான மின் கம்பங்கள் மின் இணைப்புகள் விரைந்து பெற்று மின்விளக்கு அமைக்கும் பணியும் உடன் முடிக்க அறிவுறுத்தினார்கள். இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை திட்ட அலகு கோட்ட பொறியாளர் சுந்தர் மற்றும் திருப்பத்தூர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு கோட்ட பொறியாளர் இ.முரளி, திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் இராஜசேகரன், நாட்றம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர் உடன் இருந்தனர்.
No comments