கந்திலியில் விவசாயிகளுக்கு இலவசமாக இயற்கை பூச்சிவிரட்டி தயாரிக்க ஆடாதோடா, நொச்சி கன்றுகள் வழங்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி வேளாண்மை துறையின் மூலம் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இன்று மாலை 3 மணியளவில் இயற்கை பூச்சி விரட்டி தயாரிக்க விவசாயிகளுக்கு இலவசமாக ஆடா தோடா, நொச்சி நடவு கன்றுகள் வழங்கப்படுகின்றது.
ஒரு விவசாயிக்கு 25 ஆடா தோடா கன்றுகளும் 25 நொச்சி கன்றுகளும் வழங்கப்படுகின்றது. கந்திலி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 7500 ஆடா தோடா கன்றுகளும் 7500 நொச்சி கன்றுகளும் இருப்பில் உள்ளது. திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கண்ணகி விவசாயிகளுக்கு ஆடா தோடா மற்றும் நொச்சி கன்றுகள் வழங்கினார்.
No comments