முன்விரோதத்தால் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கடை தீ வைப்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேரில் ஆறுதல்.
தூத்துக்குடி, ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் வெற்றிராஜன். பிரையண்ட்நகர் வியாபாரிகள் நலச்சங்க தலைவரான இவர் அப்பகுதியில் பழைய இரும்புக்கடை மற்றும் குடோன் வைத்துள்ளார். இந்நிலையில், இருதினங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் அவரது கடைக்கு தீவைத்துள்ளனர். இதில் கடை பெரும் சேதம் அடைந்துள்ளது.
இதனையடுத்து, தூத்துக்குடி வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தீ வைக்கப்பட்ட கடையை நேரில் பார்வையிட்டு, பிரைண்ட் நகர் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் வெற்றிராஜனுக்கு ஆறுதல் கூறினார்.
இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சோலையப்பராஜா, மாவட்டச் செயலாளர் மகேஸ்வரன், தெற்கு மாவட்ட செயலாளர் ராயல் கண்ணன், மகளிர் அணி ராஜம், 3வது மைல் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயபாலன், செல்லத்துரை (எ) செல்வம், திருச்செந்தூர் ரோடு வியாபாரிகள் சங்கச் செயலாளர் மகேஸ்வரன் சிங், பிரையண்ட்நகர் வியாபாரிகள் நலச்சங்க செயலாளர் சுகன்யா செந்தில்குமார், பொருளாளர் ராஜேஷ், துணைத் தலைவர்கள் கருணாநிதி, முருகேசன், ரமேஷ், துணைச் செயலாளர்கள் கண்ணன், சரவணன், சிலுவைப்பிச்சை மற்றும் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments