Breaking News

முதலமைச்சர் கோப்பைக்கான கடற்கரை கைப்பந்து போட்டியில் மாநில அளவில் வெள்ளிபதக்கம். சீர்காழி பெஸ்ட் பள்ளி மாணவர்கள் சாதனை..

 



  மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலமைச்சர் கோப்பைக்கான பீச்வாலிபால்(கடற்கரை கைப்பந்து) போட்டியில் மாநில அளவில் இரண்டு வெள்ளிப்பதக்கம், ஒரு வெண்கலப்பதக்கம் வென்று சாதனைபடைத்து  ரயில் மூலம் ஊர் திரும்பி மாணவ,மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்து சாரட் வண்டியில் சீர்காழியின் முக்கிய வீதிகளின் வழியாக அழைத்துச் செல்லப்பட்டது.


தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான பீச்வாலிபால் போட்டியானது சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இப்போட்டியில் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் பீச் வாலிபால் போட்டியில் பெண்கள் பிரிவில் நித்திஷ்வரி, சுந்தரநாயகி, ஆண்கள் பிரிவில் ஹரிஷ், பிரதிப்குமார் என்ற மாணவர்களும் வெள்ளிப்பதக்கம் வென்றனர். சஞ்சய், விஷ்வா என்ற மாணவர்கள் வெண்கலப்பதக்கம் வென்றனர். பதக்கம் வென்று ரயில் மூலம் சீர்காழி வருகைபுரிந்த மாணவ}மாணவிகளை ரயில் நிலையத்தில் பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.எஸ்.என்.ராஜ்கமல், ஸ்ரீநடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியின் தாளாளர் ஆதித்யா ராஜ்கமல், ரோட்டரி சங்க தலைவர் கணேஷ் மற்றும் முன்னாள் இந்நாள் சங்க உறுப்பினர்கள், மயிலாடுதுறை மாவட்ட வாலிபால் சங்க செயலாளர் பாபு மற்றும் பொருளாளர் சேரன், உடற்கல்வி இயக்குனர்கள் முரளிதரன், செல்லதுரை மற்றும் பல்வேறு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள், துர்கா பைனான்ஸ் உரிமையாளர்கள் ஆனந்த், ஆதிசங்கர், சமூக ஆர்வலர் முருகவேல் ஆகியோர் மாலை அணிவித்து பேண்டுவாத்தியம் முழங்க அழைத்து வந்தனர். தொடர்ந்து குதிரை சாரட் வண்டியில் சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து கடைவீதி வழியாக பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சதீஷ் மற்றும் நித்யா அவர்களையும் பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் அமுதா நடராஜன், நிர்வாக அதிகாரி சீனிவாசன், முதல்வர் ராமலிங்கம், துணை முதல்வர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

No comments

Copying is disabled on this page!