பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் நள்ளிரவில் பெய்த 4செமீ மழை. தேரடி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தேங்கி நின்ற மழைநீரில் தத்தளித்து செல்லும் வாகனங்கள்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 4செமீ மழை பெய்துள்ளது. காலை முதல் விட்டுவிட்டு லேசான சாரல் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பொன்னேரி தேரடி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தேங்கி நின்ற மழைநீரில் வாகனங்கள் கடந்து செல்ல மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
தேங்கி நின்ற மழைநீரில் தத்தளித்தபடி வாகனங்கள் சென்று வருகின்றன. ராட்சத மோட்டார் ஒன்றை வைத்து தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
No comments