காரைக்காலில் பழமை வாய்ந்த புனித பிரான்சிஸ் அசிசியார் பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.
காரைக்கால் மாவட்டத்தின் மைய பகுதியான பெரியபேட் பகுதியில் அமைந்துள்ளது நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பழமை வாய்ந்த பிரான்சிஸ் அசிசியார் பேராலயம். பேராலயத்தின் ஆண்டு திருவிழா மூன்று தினங்கள் நடைப்பெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக புனித பிரான்சிஸ் அசிசியார் உருவம் வரைந்த புனித கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக புதிதாக ரூபாய் 2.5 லட்சம் செலவில் நிறுவப்பட்ட புதிய கொடி மரத்தை பங்குத்தந்தைகள் புனிதம் செய்து கல்வெட்டை திறந்து வைத்தனர்.
அதனை தொடர்ந்து புனிதக் கொடி பங்குத்தந்தையால் மந்திரிக்கப்பட்டு தேவ மன்றாட்டுடன் கொடியேற்ற விழா துவங்கியது. கொடி மேலே ஏற துவங்கியதும் ஆலயம் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட வண்ண விளக்குகள் மிளிரத் தொடங்கின. கொடி உச்சியை அடையும் வேளையில் கொடி மரத்தின் மேலே பல வண்ணங்களில் வான வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கு தந்தையர்கள் அருட் சகோதரிகள் இறைமக்கள் கிராம பஞ்சாயத்தார்கள் விழா குழுவினர்கள் உள்ளிட்ட ஏராளமான கிறித்துவ மக்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நாளை மாலை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் 13-ம் தேதி கொடி இறக்கத்துடன் ஆண்டு திருவிழா நிறைவடைகிறது.
No comments