நாட்றம்பள்ளி அக்ரஹாரம் மலைக்கோயில் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் திருவிழா.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா அக்ராகரம் மலைக்கோயில் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் 5 வது சனிக்கிழமை திருவிழா ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் தலைவர் ஏ.சி. முத்து தலைமையில் ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு இன்று காலை சிறப்பு அலங்காரமும் ஆராதனையும் பூஜைகள் நடைபெற்றது.
ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் செயலாளர் தேவன், பொருளாளர் பெருமாள், துணை செயலாளர் மணி, துணைத்தலைவர் ஏழுமலை, அறங்காவலர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாமுடி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். மேலும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 1000 க்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் ஸ்ரீராகவேந்திரா டிவி சென்டர் & பர்னிச்சர் பிரைவேட் லிமிடெட் சார்பில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர். உடன் அறங்காவலர் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் கோயில் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்புப்னர்.
No comments