ஸ்ரீநிவாச பெருமாள் ஆலய தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது , வடமாநில தொழிலாளர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.
மயிலாடுதுறை அடுத்த பல்லவராயன் பேட்டை பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டு பிரம்மோற்ச விழாவின் முக்கிய நிகழ்வான திருதேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் இருந்து ராஜ அலங்காரத்தில் தாயாருடன் ஸ்ரீநிவாச பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். அங்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன்
தேரினை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக பெரும்பாலான வடமாநில தொழிலாளர் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரினை இழுத்து வழிபட்டனர். மேலும் பல்லவராயன் பேட்டை பகுதியில் துவங்கிய தேர் வீதி உலாவாக திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் ஆலயத்தில் நான்கு ரத வீதிகளில் வழியே சென்றது. பின்னர் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வாசலில் பக்தர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.
No comments