ஈரோட்டில் நவராத்திரி பண்டிகை முன்னிட்டு வர்ஷமர்தினி அலங்காரத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஈரோடு மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான சென்னிமலை சாலை முத்தம்பாளையம் ஸ்டெம் பார்க் பின்புறம் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி பண்டிகையானது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு தினமும் வெவ்வேறு அலங்காரம் செய்து பூஜையில் செய்யப்பட்டு வருகிறது, இதனைத் தொடர்ந்து இன்று தசமி திதியை முன்னிட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு வருஷமர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மேலும் ஆலயத்திற்கு வந்த பக்தர்களுக்கு அருள் வாக்கு சுவாமி உதய அண்ணன் அவர்கள் அருள்வாக்கு கூறினார் பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு மங்களப்பொருட்கள் வழங்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments