Breaking News

கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை கிடைக்கப் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு வட்ட வாரியாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.


கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை UDIDவழங்கப்பட்டு(வருகிறது. தற்பொழுது தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மகளிர் திட்ட பணியாளர்களை கொண்டு சமூக தரவு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் A B & C என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு மொத்தம் 2244 மாற்றுத்திறனாளிகள் சமூக தரவு கணக்கெடுக்கப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உள்ளவர்கள் மற்றும் அவர்களது விவரங்கள் அலுவலகத் தரவு தளத்தில் சேமிக்கப்பட்டுள்ள B வகை மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உள்ளவர் மற்றும் அவர்களது முழுமையான தகவல்கள் அலுவலகத்தில் தரவு தளத்தில் சேமிக்கப்படவில்லை. C வகை மாற்றுத்திறனாளிகள் தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையும் இன்றி புதிய மாற்றுத்திறனாளிகளாக கணக்கெடுப்பாளர்களால் கண்டறியப்பட்டவர்கள்.


இந்த C வகையில் கரூர் மாவட்டத்தில் 1932 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர் அதன்படி C வகை மாற்றுத்திறனாளிகள் 922 நபர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தி தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை UDID வழங்கிட சிறப்பு முகாம்கள் வட்டார வாரியாக 22.10. 2024 மற்றும் 23.10.2024 ஆகிய இரண்டு நாட்கள் புகழூர் அரசு மருத்துவமனையிலும், 24.10.2024 மற்றும் 25.10.2024 ஆகிய இரண்டு நாட்கள் கோவக்குளம் கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையிலும், 26.10.2024 மற்றும் 29.10.2024 ஆகிய இரண்டு நாட்கள் மைலம்பட்டி கடவூர் அரசு மருத்துவமனையிலும், 05.11.2024, 06.11.2024, 07.11.2024 ஆகிய மூன்று தினங்கள் குளித்தலை அரசு மருத்துவமனையிலும், 08.11.2024, 09.11.2024 ஆகிய இரண்டு தினங்கள் கரூர் அரசு மருத்துவமனையிலும், 13.11.2024 அன்று பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையிலும், 14..11.2024 அன்று அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் 15.11.2024 அன்று மண்மங்கலம் அரசு மருத்துவமனையிலும் நடைபெறவுள்ளது.


இது நாள் வரை தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத புதிய கண்டறியப்பட்டவர்கள் மற்றும் கண்டறியப்படாதவர்களும் கலந்து கொண்டு மருத்துவச் சான்று பெற்று தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்குரிய அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குரிய குடும்ப அட்டை, ஆதார், ( அசல், நகல்) பாஸ்போர்ட் போட்டோ 4, ஆகியவற்றுடன் மேற்காணும் விபரப்படி நடைபெறும் முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார் 

No comments

Copying is disabled on this page!