நாட்றம்பள்ளி தாலுக்கா மூக்கனூர் ஊராட்சியில் பொது விநியோகத் திட்டத்தின் சிறப்பு முகாம்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா மூக்கனூர் ஊராட்சி புதூர் கிராமத்தில் அமைந்துள்ள பொது நியாய விலை கடையில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நாட்றம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் ராமன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய அட்டை விண்ணப்பத்தில், அட்டை நகல் பெறுதல் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள அப்பகுதி பொதுமக்கள் விண்ணப்பம் செய்து முகாமில் தீர்வு பெற்று வருகின்றனர். உடன் அலுவலர்கள் அருள், நியாய விலை கடை விற்பனையாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் உள்ளனர்.
No comments