Breaking News

புதுச்சேரி-கடலூர் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பலு தூக்கும் கிரேனில் பேட்டரி உள்ளிட்ட உதிரி பாகங்கள் திருடிய இருவரை போலிசார் கைது செய்தனர்.

 


விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் கண்ணன்.(52), இவர் சொந்தமாக மூன்று பலு தூக்கும் கிரேன் வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 17-ம் தேதி வேலையின் காரணமாக மூன்று கிரேன்களையும் புதுச்சேரி-கடலூர் மெயின் ரோடு அரியாங்குப்பத்தில் காவல் நிலையம் எதிரே உள்ள தனியார் எலக்ட்ரிக்கல் ஒர்க்ஸ் கடை எதிரே வேலை முடிந்து சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்று மறுநாள் வந்து பார்த்தபோது அதன் கேபின் கதவுகள் திறந்து காணப்பட்டது, மேலும் அதிலிருந்த பேட்டரி, 2 செட் ஸ்டீல் ரோப், நைலான் பெல்ட், பெரிய கிளாம்பு மற்றும் சிரிய கிளாம்பு உள்ளிட்ட ரூ.46,000/- மதிப்புள்ள பொருட்கள் திருடு போய் இருப்பதைக் கண்டு கண்ணன் அதிர்ச்சியடைந்தார், அதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் விசாரித்தும் எந்த தகவலும் தெரியாத பட்சத்தில் இது குறித்து கண்ணன் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்,

 அதனடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் வழக்கு பதிந்து அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து, மணணவெளியைச் சேர்ந்த டிப்பர் லாரியின் உரிமையாளரான மணி என்ற மணிகண்டன், சின்ன இரிசாம்பாளையம் வேல்முருகன்,லாரி டிரைவர் மணிகண்டன் ஆகியே மூன்றுபேர் என்பது தெரிந்தது.

இதனையடுத்து வேல்முருகன் மற்றும் டிரைவர் மணிகண்டனை கைது செய்த போலிசார் லாரி உரிமையாளர் மணிகண்டனை தேடி வருகின்றனர்.


No comments

Copying is disabled on this page!