புதுச்சேரி அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற பல் திறன் அறிவியல் கண்காட்சியில் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் செயல்படு விதங்களை மாணவ மாணவிகள் உருவாக்கி அசத்தியிருந்தனர் இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
புதுச்சேரி இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று தொடங்கியது இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுவை கடலூர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் மற்றும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோர் கலந்து கொண்டு பல் திறன் அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்தனர்.
இந்த கண்காட்சியில் சுமார் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவிகள் காட்சிக்கு வைத்திருந்தனர். இதில் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், இயற்பியல், வேதியல், உயிரியல், கணினி அறிவியல், வணிகவியல், பொருளாதாரம், விளையாட்டு, ஓவியங்கள், கைவினை கலை மற்றும் பாரம்பரிய கலை என அனைத்து அரங்குகளும் காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும் இந்த கண்காட்சியில் குளிரூட்டப்பட்ட வகையில் அமைக்கப்பட்ட விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்படக்கூடிய விதங்களை மாணவிகள் தத்ரூபமாக உருவாக்கியிருந்தனர் இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த கண்காட்சியில் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு பயனடைந்தனர். கண்காட்சியில் பள்ளியின் முதல்வர் ஜான் ஹில்டா உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments