Breaking News

பேரணாம்பட்டு அருகே குப்பை கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை சிறைப்பிடித்த சமூக ஆர்வலர்கள்.


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரிகுத்தி ஊராட்சி 1 வது வார்டு காயிதே மில்லத் நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் தொடர்ந்து பல மாதங்களாக குப்பைக்  கழிவுகளை கொட்டி வரும் குப்பை வண்டியை அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அஸ்லாம் பாஷா ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் கோபிநாத் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதேவி சொக்கன் ஆகியோர்கள் நேரில் வந்து சுமுகமாக பேச்சு வார்த்தை நடத்தி குப்பைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதாக வாக்குறுதி அளித்த பின்னரே வாகனத்தை விடுவித்தார்கள். 

இது குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் விசாரித்த போது தொடர்ந்து இதுபோன்று பல மாதங்களாக குப்பைகளை கொட்டி வருவதாகவும் இதனால் இங்கு மழைக்காலங்களில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாகவும் நோய் தொற்று ஏற்பட்டு இங்கு வசிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தார்கள். 

இதனால் இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் அஸ்லம் பாட்ஷா மற்றும் ஊர் பெரியோர்கள் அனைவரும் ஒன்று கூடி பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் இல. வடிவேல் அவர்களை நேரில் சந்தித்து குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த கோரியும் மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் தொற்றுகளை தடுக்கும்படியாகவும் கோரிக்கை வைத்தனர் கோரிக்கையை ஏற்ற வட்டாட்சியர் இதன் மீது உடனடிக்கையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். 

- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்.

No comments

Copying is disabled on this page!