நரிக்குறவர் குழந்தைகளை வாடகை சொகுசு காரில் துணி கடைக்கு அழைத்து வந்து விருப்பப்பட்ட புத்தாடைகளை தீபாவளிக்கு வாங்கி பரிசளித்த சமூக ஆர்வலர்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயில் காவல் நிலையம் எதிரே உள்ள இலுப்பை தோப்பில் 20 நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். காலமாற்றத்திற்கு ஏற்ப பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் இவர்கள் ஏழ்மையான நிலையில் சிறு குடிசைகளில் குடும்பத்துடன் தங்கி வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றும் வகையில் மயிலாடுதுறை சார்ந்த சமூக ஆர்வலர் கேபி ராஜ் என்பவர், வாடகை சொகுசு காரை எடுத்து வந்து அதில் நரிக்குறவர் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு, ஜவுளி கடைக்கு சென்றார். ஜவுளி கடையில் நரிக்குறவர் குழந்தைகள் விரும்பிய புத்தாடைகளை வாங்கி கொடுத்து அவர்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கினார். சமூக ஆர்வலரின் இந்த செயல் பொதுமக்களிடையே பாராட்டை ஏற்படுத்தியுள்ளது.
No comments