கிராம பெண்களுக்கான பெயிண்டிங் திறன் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சியின் தொடக்க விழா.
திருப்பத்தூர் ஒன்றியம் ஏகே மோட்டூர் ஊராட்சியில் இன்று வி.ஐ.டி - வேலூர், நிலையான ஊரக வளர்ச்சி & ஆராய்ச்சி கல்வி மையம் மற்றும் நிப்பான் பெயிண்ட்ஸ் பிரவேட் லிமிடெட் மற்றும் ஏ.கே மோட்டூர் ஊராட்சி இணைந்து கிராம புற பெண்களுக்கான பெயிண்டிங் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சியின் தொடக்க விழா இன்று ஏ.கே மோட்டூர் ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தனபதி இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் திருப்பத்தூர் மாவட்டம் சங்கீதா உதவி திட்ட அலுவலர், மகளிர் திட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ரேகாமதி காவல் ஆய்வாளர் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம் ரூபி காவல் துணை ஆய்வாளர் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
தலைமை முனைவர் சுந்தரராஜன், இணை இயக்குநர், (சி.எஸ். ஆர். டி & ஆர்.எஸ்) வி.ஐ.டி -வேலூர் பு.வேலு, ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன்,உதவி திட்ட அலுவலர்,விஐடி வேலூர் வசந்தி ஊராட்சி செயலாளர் கலைமணி ஊக்குனர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.
No comments