Breaking News

கோனான்குப்பம் புனித பெரியநாயகி அன்னை திருத்தலத்திற்கு உளுந்தூர்பேட்டையில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் புனித பயணம் மேற்கொண்டனர்.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோனான்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள புனித பெரியநாயகி அன்னை கிருத்துவ தேவாலயத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடப்பது வழக்கம் இதற்காக கடலூர் மற்றும் புதுச்சேரி கிருத்துவ மறை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தேவாலயங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கோனான்குப்பம் புனித பெரியநாயகி அன்னை கிருத்துவ தேவாலயத்திற்கு புனித நடைப்பயணம் செய்வார்கள் அதன்படி இன்று மதியம் உளுந்தூர்பேட்டை சென்னை சாலையில் உள்ள புனித குழந்தை இயேசு தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்ட பின்பு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் புனித பெரியநாயகி அம்மனை திருத்தேர் பங்குத்தந்தை ரட்சகர் சிறப்பு பிரார்த்தனை செய்யபட்ட பின்பு புறப்பட்டது.

அப்பொழுது வேண்டுதலின் பேரில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் நடை பயணம் மேற்கொண்டனர் மேலும் நடை பயணத்தின் நடுவே அலங்கரிக்கப்பட்ட தேரில் குழந்தை இயேசு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது உளுந்தூர்பேட்டையில் இருந்து புறப்பட்ட புனித நடைப்பயணம் காட்டுநெமிலி, கோவிலானூர் சாலை, மங்கலம்பேட்டை வழியாக சென்று இன்று இரவு கோனான்குப்பம் பெரிய நாயகி அன்னை தேவாலயத்தை அடைகிறது. 

No comments

Copying is disabled on this page!