செவாலியே சிவாஜி கணேசன் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்த நாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கிழக்குக் கடற்கரைச் சாலை - கருவடிக்குப்பம் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி,சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன்,சரவணன் குமார்,சட்டப்பேரவைத் துணைத்தலைவர் ராஜவேலு, அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், முதல்வரின் பாராளுமன்றச் செயலர் ஜான்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கேஎஸ்பி ரமேஷ்,லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து,திரைப்பட கலைஞர்கள்,சிவாஜி ரசிகர்கள் உட்பட பலர் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
No comments