வெண்ணெய்மலை மக்களின் பிரச்னையை அரசு செவிமடுத்து கேட்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று 21-10-2024 காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி கோரிக்கைகளைக் கேட்டறிவதற்காகச் செல்லவிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை கரூரில் அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெண்ணெய்மலை செல்ல முடியாத வகையில் விடுதியைச் சுற்றி காவலர்கள் குவிக்கப்பட்டும், அனைத்து சாலைகளும் தடுப்பு வைத்து வாகனங்கள் உள்ளே வெளியே செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டும் இருந்தது.
இதனையறிந்த வெண்ணெய்மலை மக்கள் காவல்துறையின் தடுப்புகளை மீறி சீமான் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கே திரண்டு வந்து, அரசின் அடக்குமுறைக்கு எதிராகத் துணைநிற்குமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களைச் சந்தித்து கண்ணீருடன் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
குடியிருப்புகள் அகற்றப்படாமல் இருக்க உரிய சட்டப் போராட்டமும், மக்கள் திரள் போராட்டங்களையும் முன்னெடுக்க நாம் தமிழர் கட்சி வெண்ணெய்மலை மக்களுடன் உறுதியாகத் துணை நிற்கும் என சீமான் அவர்கள் உறுதியளித்தார். காவல்துறையின் வலியுறுத்தலின் பேரில் மக்கள் கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் வெண்ணெய்மலை மக்களின் கோரிக்கைகளைச் செவிமடுக்க தமிழ்நாடு அரசுக்கு சீமான் அவர்கள் வலியுறுத்தினார்.
No comments