Breaking News

சேவை செய்வதற்காகவே அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர், அரசியல் கொடிய முதலைகள் நிறைந்த குளம். - சீமான் பேட்டி.


சேவை செய்வதற்காகவே அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர், அரசியல் கொடிய முதலைகள் நிறைந்த குளம். ஒவ்வொரு காலடியும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும் என நடிகர் விஜய்க்கு ஆலோசனை. காளையார் கோவிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மருதுபாண்டியர்களின் 223 வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது : எல்லோருக்கும் தமிழகத்தில் சிலை உள்ளது, மருதுபாண்டியருக்கு சிவகங்கையில் சிலை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வல்லபாய் பட்டேலுக்கு 3000 கோடியில் சிலை வைக்கிறார்கள் என் எங்கள் பாட்டன் வஉசி க்கு எங்கு சிலை வைத்துள்ளார்கள் என்று கேள்வி எழுப்பினர் .

மாநாடு என்றால் கூட்டம் கூடத்தான் செய்யும். விஜய் நடத்தும மாநாட்டை விட மதுரையில் விஜயகாந்த் நடத்திய மாநாடு  தான் சாதனை என்று பிரேமலதா கூறுவதை  மறுக்க முடியாது. தேமுதிக மாநாடு மதுரையில் எழுச்சியை ஏற்படுத்தியது என்பதை  மறக்கவும் முடியாது. அதுதான் உண்மை என்றார், விஜய் மாநாட்டுக்கு அழைத்தாரா என்ற கேள்விக்கு அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆயிர ரகசியம் இருக்கும் என்றவர்,  இளைஞர்களின் எழுச்சி மாறுகிறதா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றார். அரசியலுக்கு நான் விரும்பி வரவில்லை தள்ளி விடப்பட்டு தான் வந்தேன் ஆனால்  தம்பி விஜய் விரும்பி வருகிறார் என்றார். 

ஊடகங்கள் வியாபா நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றம் சாட்டியவர், அரசியல்வாதிகள் சேவை செய்ய அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தவர், அரசியல் கொடிய முதலைகள் நிறைந்த குளம். ஒவ்வொரு காலடியும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும் என்று நேரடியாகவே விஜய்க்கு சொல்லி இருப்பதாக சீமான் கூறினார். 

No comments

Copying is disabled on this page!