பாய்நாற்றங்களில் முளைத்த நாற்றுகளை காட்டுப் பன்றிகள் மிதித்து தின்று சேதப்படுத்தி அட்டூழியம் ; விவசாயிகள் கவலை;
மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூர் கிராமத்தில் சம்பா தாளடி நடவு பணிக்காக விதை விட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாய்நாற்றங்களில் முளைத்த நாற்றுகளை காட்டுப் பன்றிகள் மிதித்து தின்று சேதப்படுத்தி அட்டூழியம் ; விவசாயிகள் கவலை; காட்டுப்பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 1 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரியில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் சம்பா தாளடி பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை அருகே உள்ள வில்லியநல்லூர் ஊராட்சியில் சுமார் 600 ஏக்கரில் விவசாயிகள் சம்பா தாளடி சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர். தற்போது இப்பகுதிகளில் உள்ள வயல்களில் நடவு பணி தொடங்குவதற்காக வயல்களை சமம் செய்தும், டிராக்டர் இயந்திரம் மூலம் உழுதும் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இயந்திர நடவுக்காக வயலில் ஒரு பகுதியில் பாய் நாற்றங்கால் விதைவிடும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக, ஏக்கருக்கு 30 கிலோ எடையுள்ள விதை நெல் மூட்டை ரூ.1,200 க்கு வாங்கி வயலில் பாய், நாற்றங்கால் தயார் படுத்துதல், விதைவிடுதல் என ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து பணியை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பாய்நாற்றங்காளில் விதைவிட்டு நாற்றுகள் வளர்ந்து வரும் நேரத்தில் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக காட்டுப்பன்றிகள் புகுந்து திண்று சேதப்படுத்தி வருவதாகவும், இதனால், பயிர்கள் நடவு செய்வதற்கு பயன்படுத்த முடியாமல் போவதாகவும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் நாற்றங்கரை காப்பாற்றுவதற்காக வலைகளை வாங்கி வந்தும் நாற்றங்காலை சுற்றி அடைத்தும் பாதுகாத்து வந்தாலும் காட்டுப்பன்றிகள் அட்டூழியம் அதிகமாக இருப்பதாகவும்
இரவு நேரங்களில் தூக்கத்தை இழந்தும் காட்டுப்பன்றிகளை விரட்ட சிரமப்படுவதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதேபோல் கடந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்திருந்த போதும் காட்டு பன்றிகளின் அட்டூழியத்தால் மகசூல் குறைந்ததாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் உடனடியாக இந்த காட்டுப்பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், வேளாண் துறை அதிகாரிகள் நேரில் சென்று காட்டுப்பன்றியால் பாதிக்கப்பட்ட நாற்றாங்கால்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments