உளுந்தூர்பேட்டை நகராட்சி பகுதியில் 500க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வாங்குவதற்கு ஆவணங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில் மிளகு மாரியம்மன் கோவில் தெருவில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பட்டா வழங்க கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் அந்த பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் முன்னிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் மதுசூதனன் ரெட்டி அவர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடமிருந்து ஆவணங்களை பெற்று அவற்றை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் சட்ட விதிகளை பின்பற்றி தகுதியானவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள உளுந்தாண்டவர் கோயில் உள்ள பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த போது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தரமான ரோடு சாலை அமைக்கவில்லை எனவும் வடிநீர் வாய்க்கால் அமைக்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.
உடன் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையர் இளவரசன் மற்றும் அரசு ஊழியர்கள் உடன் இருந்தனர்.
No comments