குடியாத்தம் லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் மன்றத்தின் அறிவியல் கண்காட்சி.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையில் உள்ள லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறிவியல் மன்றத்தின் சார்பாக கண்காட்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக நகர மன்றத் துணைத் தலைவர் பூங்கொடி ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் குமரன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனர் குமரகுரு மற்றும் நகர மன்ற உறுப்பினர் சுமதி மகாலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களின் படைப்புகளையும் ஆக்கங்களையும் பார்வையிட்டனர்.
அறிவியல் கண்காட்சியில் உலகிலேயே முதல் குடியுரிமை பெற்ற சோபியா என்னும் ரோபோ வள்ளுவர் கோட்டம் தஞ்சை பெரிய கோவில் சிந்து சமவெளி நாகரிகத்தின் குகை ஆதிகால மனிதனின் குகை அறிவியல் துறையின் ஏவுகணை பாரம்பரிய உணவு வகைகள் தொழில் வளர்ச்சியின் முன்னேற்றங்கள் விவசாயத்தின் அவசியம் குறித்த மாணவர்களின் படைப்புகள் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் வெகுவாக கவர்ந்தது.
அறிவியல் கண்காட்சியில் பள்ளி முதல்வர் ஆர். மேகலா துணை முதல்வர் ஆர். ராஜகுமாரி அறிவியல் மன்ற செயலாளர் ஆசிரியர்கள் என பலர் உடன் இருந்தனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்.
No comments